சென்னை: சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் சிந்தியா லூர்டே தயாரித்து நடித்துள்ள படம், ‘அனலி’. முக்கிய வேடங்களில் சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபீர் துஹான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர், சிவா (கிளி), மேத்யூ வர்கீஸ், வினோத் சாகர், ஷிமாலி நடித்துள்ளனர். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார்.
ஜெகன் சக்ரவர்த்தி எடிட்டிங் செய்ய, தாமு அரங்கம் அமைத்துள்ளார். விக்னேஷ் நடனப்பயிற்சி அளிக்க, சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சி அமைத்துள்ளார். கபிலன், அ.பா.ராஜா, யாசின் ஷெரீஃப் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே.பாபு ஆகியோர் வெளியிட்டனர்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ள தினேஷ் தீனா கூறுகையில், ‘ஒரே இரவில் நடந்து முடியும் கதை இது. 3ம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய், ரங்கராவ் ரெட்டியிடம் சிக்கிய ஜான்சி மற்றும் அவளது 10 வயது குழந்தை எப்படி தப்பிக்கின்றனர் என்பது படம். இந்திய திரையுலகிலேயே முதல்முறையாக, 10 ஆயிரம் கண்டெய்னர்கள் கொண்ட யார்டில் பிரமாண்ட அரங்கம் அமைத்து படமாக்கியுள்ளோம்’ என்றார்.
