சென்னை: தர்ஷன், பாடினி குமார், மன்சூர் அலிகான், லால், சுஜித் சங்கர், முனீஷ்காந்த், ரம்யா ராமகிருஷ்ணன் நடித்துள்ள படம், ‘சரண்டர்’. அப்பீட் பிக்சர்ஸ் சார்பில் வி.ஆர்.வி.குமார் தயாரிக்க, கவுதமன் கணபதி எழுதி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இயக்குனர் அறிவழகன் கலந்துகொண்டார். மற்றும்...
சென்னை: தர்ஷன், பாடினி குமார், மன்சூர் அலிகான், லால், சுஜித் சங்கர், முனீஷ்காந்த், ரம்யா ராமகிருஷ்ணன் நடித்துள்ள படம், ‘சரண்டர்’. அப்பீட் பிக்சர்ஸ் சார்பில் வி.ஆர்.வி.குமார் தயாரிக்க, கவுதமன் கணபதி எழுதி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இயக்குனர் அறிவழகன் கலந்துகொண்டார்.
மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், இசை அமைப்பாளர் விகாஸ் படிஸா, ரேணு கோபால், ஆர்.கே.மனோஜ் குமார், சாபு ஜோசப் பங்கேற்றனர். அப்போது தர்ஷன் பேசியதாவது: டைரக்டர் எப்போதுமே என்னை ஒரு மிகப்பெரிய ஹீரோவை போலவே நடத்தினார். முதல் நாள் படப்பிடிப்பில் அவரே என்னை தேடி வந்து காட்சிகளை சொன்னார்.
படத்தில் சண்டை காட்சி பரபரப்பாக பேசப்படும். வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கும்போதுதான், யார் உண்மையான பிரெண்ட்ஸ்? யார் அப்படி இல்லை என்று தெரியும். அந்தவகையில், நான் சென்னைக்கு வந்ததில் இருந்து என்னை சிலர் நன்றாக பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளேன். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடிக்க காத்திருக்கிறேன்.