சென்னை: புதுமுகங்கள் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ராம், ரித்திகா னிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி நடித்துள்ள படம், ‘நீ ஃபார் எவர்’. அசோக் குமார் கலைவாணி எழுதி இயக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வின் ஹேமந்த் இசை. ஜென் ஸ்டுடியோஸ்...
சென்னை: புதுமுகங்கள் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ராம், ரித்திகா னிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி நடித்துள்ள படம், ‘நீ ஃபார் எவர்’. அசோக் குமார் கலைவாணி எழுதி இயக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வின் ஹேமந்த் இசை. ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ், ஈடன் தயாரித்துள்ளனர். படம் குறித்து அசோக் குமார் கலைவாணி கூறியதாவது: இன்றைய நவநாகரீக உலகில் சோஷியல் மீடியாவின் ஆதிக்கமும், இதர செயலிகளின் மூலம் ஏற்படும் அழுத்தமும் இளைய தலைமுறையினரை ஆட்டிப்படைத்து வருகிறது. அதிலிருந்து அவர்களால் மீள முடியாமல் தவிக்கின்றனர்.
டேட்டிங் ஆப் மூலம் ஏற்படும் விபரீத விளைவுகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இந்த ஆப் பற்றிய முதல் முழுநீள படம் இது. படம் பார்த்து முடித்தவர்கள் மனதில் கண்டிப்பாக விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை உணர்வு ஏற்படும். ‘தருணம்’ என்ற படத்தை தயாரித்த நிறுவனம் தயாரித்துள்ளதால், இணையதள உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செயலியை பற்றிய படம் என்பதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டேட்டிங் ஆப்பை உருவாக்குவதன் பின்னணியில் மறைந்துள்ள ரகசியங்களையும் படம் விரிவாக பேசியிருக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.