Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தீபிகா படுகோன் ரீல்ஸுக்கு 1.9 பில்லியன் பார்வை: உலக சாதனை

மும்பை: தீபிகா படுகோன் வெளியிட்ட ரீல்ஸ் ஒன்று இன்ஸ்டாகிராமில் 1.9 பில்லியன் பார்வைகளை பெற்று உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கால்பந்து வீரர் ரொனால்டோவின் ரீல்ஸ் 1.4 மில்லியன் பார்வைகளை பெற்றதே சாதனையாக இருந்தது. அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவின் ரீல்ஸ் 1.2 பில்லியன் பார்வையை பெற்றது. இந்த சாதனைகளையெல்லாம் தீபிகா படுகோன் வெளியிட்ட கமர்ஷியல் விளம்பரம் தொடர்பான ரீல்ஸ் முறியடித்துள்ளது.

இந்த ரீல்ஸில் நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் தீபிகா, அங்கு நீச்சல் குளம் அருகே அமர்ந்து ஜூஸ் குடிக்கிறார். பிறகு உணவு பரிமாறப்படுகிறது. அங்கிருந்து ஓட்டல் அறைக்கு செல்கிறார். பிறகு மீட்டிங் ஹாலுக்கு வந்து சிலரை சந்தித்து பேசுகிறார். இதுபோன்ற வசதிகளைப் பற்றியெல்லாம் சொல்லி அந்த ஓட்டலை விளம்பரப்படுத்துகிறார். இந்த ரீல்ஸ்தான் அதிக பார்வைகளை உலக அளவில் பெற்றிருக்கிறது.