Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தீபிகாவின் செயலுக்கு வித்யா பதிலடி

ஒரு நாளில் 8 மணி நேரம் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்ற காரணத்தால், இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் ‘ஸ்பிரிட்’ என்ற பான் இந்தியா படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறினார். இது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. தீபிகா படுகோனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து சொன்னார்கள். இதுகுறித்து வித்யா பாலனிடம் கேட்டபோது, ‘தாய்மார்கள் குறைந்த மணி நேரங்களே பணியாற்றினால் போதும் என்ற பேச்சு எல்லா துறைகளிலும் ஆரம்பமாகிவிட்டது.

அது எல்லாமே மிகவும் நியாயமான பேச்சு என்று நினைக்கிறேன். குழந்தையை பெற்றெடுக்கும் ஆரம்ப ஆண்டுகளில் புதிய தாய்மார்கள் அல்லது பெண்களை நாம் இழக்காமல் இருக்க, ஒவ்வொரு துறையும் அந்த நடைமுறைகளை பின்பற்றுகின்றன. பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்கள் இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் 8 மணி நேரம் மட்டும் பணியாற்றினால் போதாது. நான் ஒரு தாய் அல்ல. எனவே, என்னால் 12 மணி நேர ஷிஃப்ட்டில் கூட பணியாற்ற முடியும்’ என்றார்.