Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தேசிங்குராஜா 2 விமர்சனம்...

போலீஸ் இன்ஸ்பெக்டர் விமல், குற்றவாளிகளுக்கு துணையாக இருக்கிறார். அவரது நண்பர் ரவுடி ஜனா, அமைச்சர் ரவிமரியாவின் மகனை கொலை கொலை செய்கிறார். அதற்கு என்ன காரணம்? இதில் விமலுக்கு என்ன தொடர்பு என்பது மீதி கதை. ஹீரோ விமல் பொறுப்பில்லாமல் நடித்தது மாதிரி இருக்கிறது. வழக்கமான ஸ்டைலையே இதிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்றொரு ஹீரோ ஜனா, அறிமுகம் என்பதை மறக்க வைத்து இயல்பாக நடித்துள்ளார். பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா பந்த்லமுரி, ஜூஹி ஆகிய ஹீரோயின்களில், பூஜா பொன்னாடா போலீஸ் கெத்து காட்டி நடித்திருக்கிறார். புகழ் காமெடியில் சிரிக்க முடியவில்லை. முதல்வர் ஆர்.வி.உதயகுமார், அமைச்சர் ரவிமரியா மற்றும் சிங்கம்புலி, சுவாமிநாதன், சாம்ஸ், வையாபுரி, மதுமிதா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முல்லை கோதண்டம் உள்பட பலர், இயக்குனர் சொன்னதை மட்டுமே செய்திருக்கின்றனர்.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆர்.செல்வாவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் ரகம். எடிட்டர் தனது கத்தரிக்கு கூடுதல் வேலை கொடுத்திருக்கலாம். எழுதி இயக்கியுள்ள எஸ்.எழில், லாஜிக்கே இல்லாத காமெடி கதையை கொடுத்திருக்கிறார். மாற்றி யோசித்திருக்கலாம்.