Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

48 மணி நேரத்தில் உருவாகி ரிலீசாகும் டெவிலன்: புதிய சாதனை

சென்னை: ‘டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு மே 29ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. 3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி, இன்று மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31ம் தேதியான இன்று மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள்.

இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற உள்ளது.’எக்ஸ்ட்ரீம்’ மற்றும் ‘தூவல்’ ஆகிய படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் கமலகுமாரி. பி., ராஜ்குமார்.என் ஆகியோர் மூன்றாவதாக தயாரிக்கும் சாதனைத் திரைப்படமான ‘டெவிலன்’ படத்தை அறிமுக இயக்குனர் பிக்கய் அருண் இயக்குகிறார். இதில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க, நாயகிகளாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள்.