Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அப்துல்கலாம் வேடத்தில் தனுஷ்

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு படத்தில், அப்துல் கலாம் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘கலாம்: மிஸைல் மேன் ஆஃப் இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை ‘ஆதிபுருஷ்’ ஓம் ராவத் இயக்குகிறார். அப்துல் கலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாகிறது. சைவின் குவாட்ராஸ் திரைக்கதை எழுதுகிறார்.

குழந்தைப் பருவம் முதல் அப்துல் கலாமின் பயணத்தை சொல்லும் படமான இதுகுறித்து ஓம் ராவத் கூறுகையில், ‘ராமேஸ் வரம் முதல் ராஷ்டிரபதி பவன் வரை ஒரு லெஜண்டின் பயணம் தொடங்குகிறது.

இந்தியாவின் ஏவுகணை நாயகன் வெள்ளித்திரைக்கு வருகிறார். பெரிதாக கனவு காணுங்கள், உயர்ந்த ஒரு இடத்துக்கு செல்லுங்கள்’ என்றார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அபிஷேக் அகர்வால், ‘டி சீரிஸ்’ பூஷன் குமார் இணைந்து அப்துல் கலாம் பயோபிக்கை தயாரிக்கின்றனர். கிருஷ்ணன் குமார், அனில் சுங்கரா இணை தயாரிப்பு செய்கின்றனர். அப்துல் கலாம் வேடத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறுகையில், ‘அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா வேடத்தில் நான் நடிப்பதை மிகப்பெரிய பாக்கியமாகவும், அதிக பணிவாகவும் உணர்கிறேன்’ என்றார்.