சென்னை: தென்னிந்திய படவுலகை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் தனுஷ், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மேலும் பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் ஆகிய தளங்களிலும் இயங்கி வருகிறார். இந்நிலையில், வரும் 28ம் தேதி தனுஷின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ என்ற படம், வரும் 26ம் தேதி...
சென்னை: தென்னிந்திய படவுலகை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் தனுஷ், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மேலும் பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் ஆகிய தளங்களிலும் இயங்கி வருகிறார். இந்நிலையில், வரும் 28ம் தேதி தனுஷின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ என்ற படம், வரும் 26ம் தேதி தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் ஆகிறது.
இதை ரீ-மாஸ்டரிங் செய்து, டிஜிட்டல் மூலம் புதுப்பித்து, 4K தரத்தில் விஜய் சூர்யா பிலிம்ஸ் சார்பில் எஸ்.விஜய நிர்மலா சரவண பவா வெளியிடுகிறார். கடந்த 2006 மே 26ம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா நடித்த படம், ‘புதுப்பேட்டை’. இதில் விஜய் சேதுபதி சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் ‘கல்ட் கிளாசிக்’ என்று அழைக்கப்படும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.