Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தனுஷ் வெளியிட்ட செல்வராகவன் படத் தலைப்பு

சென்னை: வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்தப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் முடிவு, அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது.

இந்தப்படத்தில் இயக்குநர்-நடிகர் செல்வராகவன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, வை.ஜி. மற்றும் மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர்: ரவி வர்மா கே. படத்தொகுப்பாளர்: தீபக் எஸ். இசையமைப்பாளர்: ஏ. கே. பிரியன்.