Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

சென்னை: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் கே . எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். D54 திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப குழு பணிபுரிகிறார்கள். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

கதைசொல்லலில் புதுமையை பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாய பாண்டி மற்றும் காஸ்டியூம் தினேஷ் மனோகர் & காவியா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் இந்தியாவின் பல இடங்களில், தீவிரமான கதைக்களத்தில், ஸ்டைலான ஆக்சன் திரில்லராக பிரம்மாண்டமாக படமாக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பாக வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பில், D54 ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.