சென்னை: தமிழில் திரைக்கு வந்த ‘ஆதித்ய வர்மா’, ‘மகான்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்த துருவ் விக்ரம், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம், ‘பைசன் காளமடான்’. இது வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப் பட்டுள்ளது. அப்ளாஸ்...
சென்னை: தமிழில் திரைக்கு வந்த ‘ஆதித்ய வர்மா’, ‘மகான்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்த துருவ் விக்ரம், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம், ‘பைசன் காளமடான்’. இது வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப் பட்டுள்ளது. அப்ளாஸ் எண்டர் டெயின்மெண்ட், நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
துணிச்சலும், அதிக தைரியமும் கொண்ட விளையாட்டு வீரனின் அழுத்தமான வாழ்க்கையை பற்றி சொல்லும் இப்படத்தில் ஏற்றுள்ள கேரக்டருக்காக, முன்கூட்டியே துருவ் விக்ரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். முக்கிய வேடங்களில் அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் நடித்து இருக்கின்றனர்.