Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹன்சிகாவை பிரிந்து விட்டேனா..? கணவர் பரபரப்பு பதில்

மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானியும், தொழில் அதிபர் சொஹைல் கதூரியாவும் காதலித்து கடந்த 2022ம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டார்கள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனை ஒன்றில் திருவிழா போன்று நடந்த திருமணத்தில் தற்போது பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகா, சொஹைல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆளுக்கொரு வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹன்சிகா தன் அம்மா வீட்டில் இருக்கிறாராம். சொஹைலோ தன் பெற்றோருடன் வசித்து வருகிறாராம். சில மாதங்களாகவே அவர்கள் ஒன்றாக இல்லை என கூறப்படுகிறது. இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக பேசப்படுகிறது. இது குறித்து ஹன்சிகா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. திருமணம் முடிந்ததும் சொஹைல் கதூரியாவின் குடும்பத்தாருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார் ஹன்சிகா. அப்போது தான் பிரச்னை ஏற்படத் துவங்கியதாம். கூட்டுக் குடும்பமாக இருந்தால் தானே பிரச்னை என ஹன்சிகாவுடன் தனிக்குடித்தனம் சென்றார் சொஹைல் கதூரியா. புது வீடு வாங்கி குடியேறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோவை ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை யாரும் இன்னும் மறக்கவில்லை. அதற்கு காரணம் அந்த புகைப்படங்களில் ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருந்தது தான்.

தனித்தனியே வசிப்பது பற்றி சொஹைல் கதூரியாவிடம் கேட்டபோது, அதற்கு அவர், ‘‘இது உண்மை இல்லை’’ என்று கூறியுள்ளார். விவாகரத்து செய்தி வெளியானதும் முதல் வேலையாக ஹன்சிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று திருமண புகைப்படங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை தான் ரசிகர்கள் செக் செய்தார்கள். திருமண புகைப்படங்களை ஹன்சிகா நீக்காததை பார்த்து நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.