Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மணிரத்னம் பட ஷூட்டிங்கிற்கு லேட்டாக போனேனா? சிம்பு பதில்

சென்னை: சமீபத்தில் கொடுத்த பேட்டியில், பல நாள் சர்ச்சைக்கு நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, சிம்பு படப்பிடிப்புக்கு லேட்டாக வருவார். ஆனால் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கும்போது என்ன செய்வார் என்பதுதான் பலரது கேள்வியாக இருந்துள்ளது. கமல்ஹாசனுடன் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடித்திருக்கிறார். இது குறித்து பேசிய சிம்பு, ‘‘மணி சார் படம் என்றால் படப்பிடிப்புக்கு சரியாக போய்விடுவேன். அது எப்படி? அவர் மேல பயமானு நண்பர்கள் சிலர் கேட்டாங்க. சத்தியமா அவர் மேல பயம் எல்லாம் இல்ல. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுவரை நான் மணி சார் படத்திற்கு ஒரு நாள் கூட லேட்டா போனது கிடையாது. மணி சார் வர்றதுக்கு முன்னாடி கூட நான் போய் இருக்கிறேன்.

அதற்குக் காரணம், டைரக்டரையும் தயாரிப்பாளரையும் நம்பி ஒரு நடிகர் நடிக்க போகும்போது சொன்ன நேரத்தில் படத்தை எடுக்கணும். முதலில் டைரக்டர் டைமுக்கு வரணும். அதே மாதிரி, மணி சார் படப்பிடிப்புக்கு வந்துட்டு இதை இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமா என்றெல்லாம் யோசிக்க மாட்டார். வந்தாருன்னா இன்னைக்கு என்ன எடுக்கணும்னு அவருக்கு தெரியும். சொன்ன நேரத்தில் படத்தை முடிப்பார். ஒரு நடிகருடைய டைமை, கால்ஷீட்டை வேஸ்ட் பண்ண மாட்டார். பேமென்ட் கரெக்டா வரும். சொன்ன டைம்ல படம் ரிலீஸ் ஆகும்’’ என கூறியுள்ளார்.