சென்னை: சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் துப்பறிவாளரும் பிரபல நாவல் ஆசிரியருமான சிவகுமார் நாயர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு ‘தீர்ப்பு’ என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு மோகன்ராம் இசையமைக்க, பாடல்களை அகஸ்டின் எழுதுகிறார். லோகநாதன் சீனிவாசன் ஒளிபதிவை மேற்கொள்ள, ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பல விருதுகளைப் பெற்ற பிரபல எடிட்டரும், எழுத்தாளருமான பீம்சிங் லெனின் மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+
