லிங்கா, சாரா ஆச்சர், ‘வத்திக்குச்சி’ திலீபன், ராதாரவி, சாய் தீனா, சாரா, வையாபுரி, சரத் ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன் ராஜ், சரவணன் சீலன் நடித்துள்ள படம், ‘தாவுத்’. டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எஸ்.உமா மகேஸ்வரி தயாரிக்க, பிரசாந்த் ராமன் எழுதி இயக்கியுள்ளார். சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த்...
லிங்கா, சாரா ஆச்சர், ‘வத்திக்குச்சி’ திலீபன், ராதாரவி, சாய் தீனா, சாரா, வையாபுரி, சரத் ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன் ராஜ், சரவணன் சீலன் நடித்துள்ள படம், ‘தாவுத்’. டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எஸ்.உமா மகேஸ்வரி தயாரிக்க, பிரசாந்த் ராமன் எழுதி இயக்கியுள்ளார். சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராக்கேஷ் அம்பிகாபதி இசை அமைக்க, அருண் பாரதி பாடல்கள் எழுதியுள்ளார். வரும் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது. அடிதடி, வெட்டுக்குத்து, சண்டைக் காட்சிகள் இல்லாத மிகவும் வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது.
சாரா ஆச்சர் கூறுகையில், ‘கதை சொல்வதற்காக பிரசாந்த் ராமன் என்னை ஆபீசுக்கு வரச்சொன்னார். அவர் சொன்ன கதையை கேட்டுவிட்டு, இது எனக்குத்தானா என்று ஆச்சரியமாக இருந்தது. இது அதிக சவால்கள் நிறைந்த ஒரு கேரக்டர். படம் முழுக்க நான் வராவிட்டாலும், ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியும் கேரக்டர் என்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி’ என்றார். பிரசாந்த் ராமன் கூறும்போது, ‘சிறுபட்ஜெட் படங்கள் ஜெயித்தால் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும். இப்படத்துக்கு பாபி சிம்ஹா சில உதவிகள் செய்தார். பீட்சா டெலிவரி பாயாக இருந்து இயக்குனராகி இருக்கிறேன்’ என்றார்.