Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இயக்குனரின் நம்பிக்கைக்காக நடித்த ரஜிஷா

மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள `பைசன்’ படம், வரும் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். படம் குறித்து பேசிய ரஜிஷா விஜயன், ‘மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் 2வது படம் இது. மலையாள நடிகையான என்னை, தமிழில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது `பைசன்’ படத்தில் நடித்துள்ளேன். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

மாரி செல்வராஜ் மிகவும் முக்கியமான ஒரு கதையை நேர்த்தியாக இயக்கியுள்ளார். இதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது என் அதிர்ஷ்டம். ஒரு நடிகைக்கு அதிக சந்தோஷம் கிடைப்பது இரண்டு விஷயங்களில். ஒன்று, ஆடியன்ஸ் கொடுக்கும் அன்பும், ஆதரவும். அடுத்தது, இயக்குனர் வைக்கும் அதீத நம்பிக்கை. ‘உங்களை பெரிதும் நம்புகிறேன்’ என்று சொல்லி, மாரி செல்வராஜ் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார். இது மிகவும் முக்கியமான, அழுத்தமான, நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு கேரக்டராக இருக்கும்’ என்றார்.