Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விவாகரத்துக்கு விளக்கம் சொன்ன நடிகை

பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வரும் இந்தி பட இயக்குனரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப், தான் இயக்கிய ‘தேவ்.டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கல்கி கோச்லினை, கடந்த 2011ல் காதல் திருமணம் செய்தார். புதுச்சேரியில் பிறந்த கல்கி கோச்லின் பிரெஞ்சு-இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். திருமணமான 2 ஆண்டுகளிலேயே கருத்து மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, 2015ல் விவாகரத்து மூலம் இருவரும் பிரிந்தனர். சமீபத்தில் பேட்டி அளித்த கல்கி கோச்லின், விவாகரத்து குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘எனது பெற்றோர் கடுமையாக சண்டை போட்டு தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொண்டனர். அவர்களின் சண்டையால், அப்போது 13 வயதான என் வாழ்க்கை கேள்விக்குறியானது.

பிறகு என் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். நானும் சண்டை சச்சரவு பார்க்காமல், எதிர்கால வாழ்க்கையை மனதில் வைத்து முன்னேறினேன். என் பெற்றோரின் சண்டைகளும், என் சிறுவயது மன அழுத்தமும் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. திருமணமான சில நாட்களிலேயே எனக்கும், அனுராக் காஷ்யப்பிற்கும் சண்டை வலுத்தது. அப்போது, என் சிறுவயதிலான அதிக மன அழுத்தம் நிறைந்த நாட்கள் கண்முன் வந்து சென்றது. எனக்கு குழந்தை பிறந்தால், இதுபோன்ற சண்டை சச்சரவுகளால் அதன் வாழ்க்கை கேள்விக்குரியதாகி விடும் என்று மனதில் ஓடியது. இதை மனதில் வைத்துதான் உடனே நான் விவாகரத்து செய்தேன்’ என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.