சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடித்த ‘முப்பரிமாணம்’ என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர், திவ்யபாரதி. பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக ‘பேச்சுலர்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர், அதிக கிளாமர் காட்டி நடித்து, இளம் ரசிகர்கள் கூட்டத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். பிறகு விஜய் சேதுபதி மனைவியாக ‘மகாராஜா’ என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த அவர், தெலுங்கில் ‘கோட்’ என்ற படத்தில் ஒப்பந்தமானார். மாடலிங், விளம்பரம், வெப்சீரிஸ், சோஷியல் மீடியா பப்ளிசிட்டி என்று லட்சக்ணக்கில் பணம் சம்பாதித்து வரும் திவ்யபாரதி, மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக ‘கிங்ஸ்டன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
தவிர, ‘மதில் மேல் காதல்’ என்ற படத்தில் நடித்திருக்கும் அவர், தற்போது ஆரஞ்சு நிற உடையில் வளைந்து, நெளிந்து ஸ்டன்னிங் லுக்கில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதற்கு சில நெட்டிசன்கள் தாறுமாறான கமென்டுகளை குவித்து வருகின்றனர். தமிழ் படவுலகில் மிகவும் நீளமான கூந்தல் கொண்ட அழகியாக வலம் வரும் திவ்யபாரதி, அடிக்கடி தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவருக்கு மெசேஜ் செய்துள்ள ரசிகர்கள், ‘அடுத்து என்னென்ன படத்தில் நடிக்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், ‘தமிழில் ‘பேச்சுலர்’ என்ற படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். சில கதைகளை தேர்வு செய்துள்ளேன். அதை இப்போது வெளியே சொல்ல முடியாது. எனது முதல் 10 படங்களை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வாய்ப்புகள் நிறைய வருகிறது. இனிமேல் எனக்கு எல்லாமே நல்லதாக நடக்கும்’ என்றார்.