Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இறுதி கட்ட படப்பிடிப்பு; தீபாவளிக்கு வெளியாகும் லெஜெண்ட் சரவணனின் புதிய படம்

மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்: லெஜெண்ட் சரவணன்

லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது குறித்த ருசிகரத் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கூறியதாவது: "என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும்.

படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும். நன்றி, வணக்கம்."

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தை வெற்றி மற்றும் பாராட்டுகளை குவித்த ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ்.