Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திவ்யாவாக நடித்தது சவாலாக இருந்தது: டிஎன்ஏ பற்றி நிமிஷா சஜயன்

சென்னை: ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்க, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சவுத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் நடித்துள்ள படம், ‘டிஎன்ஏ’. பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீன் சைவி, சத்யபிரகாஷ், அனல் ஆகாஷ் ஆகிய 5 பேர் பாடல்களுக்கு இசையும், ஜிப்ரான் வைபோதா பின்னணி இசையும் அமைத்துள்ளனர். கார்த்திக் நேத்தா, முத்தமிழ், உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளனர்.

வரும் 20ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் கே.பாபு, ஹேமந்த் ஆகியோருடன் கவிஞர் வெண்ணிலாவின் மகள்களும், ஒன்றிய தேர்வாணையம் நடத்திய போட்டி தேர்வில் தமிழக அளவில் சாதனை படைத்த கவின்மொழி, நிலா பாரதி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிமிஷா சஜயன் பேசும்போது, ‘எனக்கு இது ரொம்ப ஸ்பெஷலான படம். டிஎன்ஏ என்பது திவ்யா அன்ட் ஆனந்த் என்ற கேரக்டர்கள். திவ்யாவாக நடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதர்வா தனது நடிப்பில் திரையில் மாயஜாலம் செய்துள்ளார்’ என்றார்.