தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்து வருபவர், கவுரி ஜி.கிஷன். ‘96’, ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’, ‘அடியே!’, ‘உலகம்மை’, ‘ஹாட் ஸ்பாட்’, ‘போட்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தவிர வெப்தொடர், இசை ஆல்பம் ஆகியவற்றிலும் நடித்துள்ள அவர், தற்போது புதுமுகம் ஆதித்யா மாதவன் காவல்துறை அதிகாரியாக...
தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்து வருபவர், கவுரி ஜி.கிஷன். ‘96’, ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’, ‘அடியே!’, ‘உலகம்மை’, ‘ஹாட் ஸ்பாட்’, ‘போட்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தவிர வெப்தொடர், இசை ஆல்பம் ஆகியவற்றிலும் நடித்துள்ள அவர், தற்போது புதுமுகம் ஆதித்யா மாதவன் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ‘அதர்ஸ்’ என்ற படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார்.
மற்றும் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பெராடி, மாலா பார்வதி, ஜெகன், ஆர்.சுந்தர்ராஜன் நடித்துள்ளனர். விளம்பரத்துறையில் எடிட்டராக பணியாற்றிய அபின் ஹரிஹரன், இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். மெடிக்கல் கிரைம் திரில்லர் படமான இதை கிராண்ட் பிக்சர்ஸ் சார்பில் முரளி, கார்த்திக்.ஜி இணைந்து தயாரித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் படம் ரிலீசாகிறது.