சென்னை: ‘மத ராஸி’ ப்டத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், வேதிகா. பிறகு ‘முனி’, ‘சக்கரகட்டி’, ‘காளை’, ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’, ‘காஞ்சனா 3’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். விலங்குகளுக்கு எதிரான பல்வேறு கொடுமைகளுக்காக குரல் கொடுத்து வரும் வேதிகா, விலங்குகளை இறைச்சிக்காக துன்புறுத்துவது போன்ற வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்தியா உள்பட உலகம் முழுவதும் இறைச்சிக் காக கோழிகள், பன்றிகள், மாடு கள் மற்றும் ஆடுகள் எவ்வாறு சித்ரவதை செய்யப்படுகின்றன என்ற கசப்பான உண்மை இது. இறைச்சிக்காக விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. மனிதர்களை விட மரணம் அவற்றுக்கு கனிவானது. இந்த படுகொலையின் ஒரு பகுதியாக நீங்கள் இன்னும் இருக்க விரும்புகிறீர்களா? விலங்குகளை கொல்வதற்கு நிதி வழங்குவதை உடனடியாக நிறுத்துங்கள். வன்முறையில்லாத சைவத்தை தேர்வு செய்யதொடங்குங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
+
