ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த ‘திரிஷ்யம்’ படம் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம், சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டது. பிறகு வெளியான ‘திரிஷ்யம்’ 2ம் பாகத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘திரிஷ்யம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன்,...
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த ‘திரிஷ்யம்’ படம் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம், சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டது. பிறகு வெளியான ‘திரிஷ்யம்’ 2ம் பாகத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘திரிஷ்யம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் நடித்திருந்தனர். மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இந்தியில் அதற்கு முன்பே உருவாக்க அஜய் தேவ்கன் மற்றும் படக்குழுவினர் திட்டமிட்டனர்.
இவ்விஷயத்தை அறிந்த ஜீத்து ஜோசப், 3ம் பாகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி தொடங்கினால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார். ‘திரிஷ்யம்’ படம் தொடங்கியது மலையாளத்தில்தான். அதனால், இங்குதான் 3ம் பாகம் முடிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகத்துக்கான பணிகளை இந்தியில் நிறுத்தி வைத்துள்ளனர்.