Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

துபாயில் சர்வதேச குறும்பட விழா

துபாயில் கல்ஃப் கட்ஸ் சார்பில் சர்வதேச குறும்பட விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான சேரன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி மற்றும் வலைப்பேச்சு யூடியூபர்கள் பங்கேற்றனர். இதில் 80க்கும் அதிகமான குறும்படங்கள் போட்டியில் பங்கேற்றன. சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை கல்ஃப் கட்ஸ் நிறுவனர் பிரவீன் தலைமையில் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் ,பிரசாத், பகவதி ரவி, தமிழ் குடில் மகாதேவன், டிபா அமைப்பின் பால் பிரபாகர், ஹோப் கவுசர், ஈமான் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சமீர் ,ஹாஜா அலாவுதீன், அஸ்கர், பத்திரிக்கையாளர்கள் கமால் ,நஜீம் மரிக்கா , சின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.