சென்னை: மெக்சிகோவை சேர்ந்த இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமான அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டுவின் ‘அமோர்ஸ் பெரோஸ்’, ‘21 கிராம்’, ‘பாபெல்’, ‘பியூட்டிஃபுல்’, ‘பேர்ட்மேன்’ ஆகிய படங்களுக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. ‘தி ரெவனன்ட்’ என்ற படத்துக்காக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 2015, 2016ம் ஆண்டுகளுக்கான சிறந்த இயக்குனருக்கான...
சென்னை: மெக்சிகோவை சேர்ந்த இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமான அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டுவின் ‘அமோர்ஸ் பெரோஸ்’, ‘21 கிராம்’, ‘பாபெல்’, ‘பியூட்டிஃபுல்’, ‘பேர்ட்மேன்’ ஆகிய படங்களுக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. ‘தி ரெவனன்ட்’ என்ற படத்துக்காக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 2015, 2016ம் ஆண்டுகளுக்கான சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுகள் பெற்ற அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டு, தனது அடுத்த படத்தை பிளாக் காமெடி ஜானரில் இயக்குகிறார். இதில் டாம் குரூஸ், ஜெஸ்ஸி பிளெமன்ஸ், சான்ட்ரா ஹுல்லர் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைத்தான் பஹத் பாசில் நிராகரித்து விட்டார்.
அதற்கான காரணத்தை பஹத் பாசில் கூறுகையில், ‘‘உண்மையை சொல்வது என்றால், ஆடிஷன் நடந்த பிறகு இயக்குனருக்கு என்னை பிடிக்கவில்லை. இதற்கு காரணம் எனது ஆங்கில உச்சரிப்பு. மேலும், சில மாதங்கள் வரை அமெரிக்காவில் என்னை சம்பளம் இல்லாமல் தங்கும்படி சொன்னார்கள். அட்வான்ஸ் கூட கொடுக்கவில்லை என்பதால், அப்படத்தை விட்டு விலக முடிவு செய்தேன். ஒருவேளை ஆடிஷன் நடக்காமல் இருந்திருந்தால், அதற்கு நான் பரிசீலனை செய்யப்படுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்காது. பிறகு இயக்குனருடன் நான் வீடியோகாலில் பேசினேன். அப்போது, படத்துக்கு அவர் தேடும் நபர் நான் இல்லை என்பதை புரிந்துகொண்டார். எனவேதான் தொடர்ந்து அப்படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை’’ என்றார்.