மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் பஹத் பாசிலுக்கு ஹாலிவுட் இயக்குனரிடம் இருந்து வாய்ப்பு வந்தது. சிறந்த இயக்குனருக்கான 2 ஆஸ்கர் விருதுகள் வாங்கிய அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டு படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. மெக்சிகோவை சேர்ந்த இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமான அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டுவின் ‘அமோர்ஸ் பெரோஸ்’, ‘21...
மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் பஹத் பாசிலுக்கு ஹாலிவுட் இயக்குனரிடம் இருந்து வாய்ப்பு வந்தது. சிறந்த இயக்குனருக்கான 2 ஆஸ்கர் விருதுகள் வாங்கிய அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டு படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. மெக்சிகோவை சேர்ந்த இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமான அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டுவின் ‘அமோர்ஸ் பெரோஸ்’, ‘21 கிராம்’, ‘பாபெல்’, ‘பியூட்டிஃபுல்’, ‘பேர்ட்மேன்’ ஆகிய படங்களுக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.
‘தி ரெவனன்ட்’ என்ற படத்துக்காக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 2015, 2016ம் ஆண்டுகளுக்கான சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுகள் பெற்ற அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டு, தனது அடுத்த படத்தை பிளாக் காமெடி ஜானரில் இயக்குகிறார். டாம் குரூஸ், ஜெஸ்ஸி பிளெமன்ஸ், சான்ட்ரா ஹுல்லர், ரிஸ் அகமது, சோஃபி வைல்ட், எம்மா டி’ஆர்சி, ராபர்ட் ஜான் பர்க் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் பஹத் பாசிலும் நடிப்பதாக கூறப்பட்டது. இதுபற்றி பேசிய அவர், ‘நிஜத்தை சொல்வது என்றால், ஆடிஷனுக்கு பிறகு அவருக்கு என்னை பிடிக்கவில்லை. இதற்கு எனது ஆங்கில உச்சரிப்புதான் காரணம். என்னை சில மாதங்கள் அமெரிக்காவில் சம்பளமின்றி தங்கும்படி சொன்னார்கள். அட்வான்ஸ் கூட தரவில்லை என்பதால், அப்படத்தை விட்டுவிட முடிவு செய்தேன்.
ஆடிஷன் நடக்கவில்லை என்றால், அதற்கு நான் பரிசீலனை செய்யப்படுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்காது. எனினும், அவருடன் வீடியோகாலில் பேசினேன். அதற்கு பின்பு, அவர் தேடும் நபர் நான் இல்லை என்று புரிந்துகொண்டார். தொடர்ந்து அப்படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை’ என்றார். தற்போது பஹத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் ‘ஓடும் குதிர சாடும் குதிர’ என்ற மலையாள படம், வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது.