ஐதராபாத்: தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ் (83), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென்று மரணம் அடைந்தார். தமிழில் 2003ல் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ என்ற படத்தில், பெருமாள் பிச்சை என்ற வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர், கோட்டா சீனிவாச...
ஐதராபாத்: தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ் (83), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென்று மரணம் அடைந்தார். தமிழில் 2003ல் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ என்ற படத்தில், பெருமாள் பிச்சை என்ற வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர், கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ உள்பட பல படங்களில் நடித்தார்.
தனது வித்தியாசமான பாடிலாங்குவேஜ் மற்றும் ஏற்ற, இறக்கத்துடன் அவர் பேசிய வசனங்கள் பிரபலமானது. ‘சாமி’ படத்தில் பேசிய வசனங்கள் டிரெண்டிங் ஆனது. விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த ’சனியன் சகடை’ என்ற கேரக்டரும் அதிக வரவேற்பு பெற்றது. வில்லன், குணச்சித்திரம், காமெடி ஆகிய கேரக்டர்களில் நடித்துள்ள அவர், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் பெண் வேடத்தில் தோன்றிய சந்தானத்துடன் நடித்த காட்சி ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்க வைத்தது.
நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர், பாடகர், அரசியல்வாதி என்று பல்வேறு தளங்களில் இயங்கி வந்த கோட்டா சீனிவாச ராவ், தமிழில் கவுண்டமணி, மணிவண்ணன் நடித்த பல படங்கள் தெலுங்கில் வெளியானபோது, அவர்களுக்கு டப்பிங் பேசியிருந்தார். 45 ஆண்டுகள் வெற்றிகரமான நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ், ஒன்றிய அரசு வழங்கிய பத்மஸ்ரீ மற்றும் ஆந்திர மாநில அரசு வழங்கிய 9 நந்தி விருதுகள் பெற்றுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக 2023ல் ‘சுவர்ண சுந் தரி’ என்ற படம் வெளியானது.
1978ல் ‘பிராணம் காரீடு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியிருந்த அவர், பிறகு அரசியலில் ஈடுபட்டு, 1999 முதல் 2004 வரை ஆந்திர பிரதேச சட்டப்பேரவையில், விஜயவாடா கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அவருக்கு மனைவி ருக்மணி, மகள்கள் பவானி, பல்லவி இருக்கின்ற னர். மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத், தெலுங்கில் ‘சித்தம்’, ‘காயம் 2’ ஆகிய படங்களில் தனது தந்தையுடன் இணைந்து நடித்தார். 2010ல் நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.
இதனால் மனம் சோர்வடைந்த கோட்டா சீனிவாச ராவ், 2023ல் மரணம் அடைந்ததாக வதந்திகள் பரவியது. உடனே ஒரு வீடியோ வெளியிட்டு, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த கோட்டா சீனிவாச ராவின் உடல் மெலிந்த தோற்றம், சில நாட்களுக்கு முன்பு வைரலாகி இருந்தது.
இந்நிலையில், ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று அதிகாலை திடீரென்று மரணம் அடைந்தார். பிரதமர் இரங்கல்: கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மற்றும் சிரஞ்சீவி, தெலுங்கு நடிகர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இன்று கோட்டா சீனிவாச ராவ் இறுதிச்சடங்கு நடக்கிறது.