ஓஜாய்: பிரபல ஹாலிவுட் நடிகையும், மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவருமான டயான் லாட் வயது மூப்பு காரணமாக காலமானார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகரில் வசித்துவந்த பிரபல ஹாலிவுட் நடிகை ரோஸ் டயான் லாட்னர் என்று அழைக்கப்படும் டயான் லாட் (89) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது இறுதி நாட்களில், ஆஸ்கர் விருது வென்ற நடிகையான அவரது மகள் லாரா டெர்ன் உடன் இருந்து கவனித்துக் கொண்டார். தாயின் மறைவை உறுதிசெய்து லாரா டெர்ன் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது அன்பான அம்மா, வழிகாட்டி, மற்றும் சிறந்த தோழி இப்போது அமைதியாக உறங்குகிறார். அவரது கலைப் பயணம் என்றென்றும் நினைவுகூரப்படும்’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது ‘ஆலிஸ் டஸ்ன்ட் லிவ் ஹியர் எனிமோர்’ (1974), ‘வைல்ட் அட் ஹார்ட்’ (1990) மற்றும் ‘ராம்ப்ளிங் ரோஸ்’ (1991) ஆகிய திரைப்படங்களுக்காக மூன்று முறை சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
+
