Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது பிரியங்கா சோப்ராவின் கணவர் மீது உள்ளாடையை வீசிய ரசிகை: நெட்டிசன்கள் கடும் தாக்கு

நியூயார்க்: நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் மீது அவரது ரசிகை ஒருவர் உள்ளாடையை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் கலக்கி வரும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரும், அமெரிக்க பாடகருமான நிக் ஜோனாஸ் பங்கேற்ற இசை நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியின்போது, மேடையில் நிக் ஜோனாஸ் பாடிக் கொண்டிருந்தார். அவருடன் அவரது சகோதரர்கள் ெகவிவ், ஜோ ஆகியோரும் பங்கேற்றனர். ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தனர். திடீரென பெண் ரசிகை ஒருவர், மேடையில் பாடிக் கொண்டிருந்த நிக் ஜோனாஸ் மீது, தனது பிராவை (உள்ளாடை) வீசி எறிந்தார்.

அதிர்ச்சியடைந்த பிறகு நிக் ஜோனாஸ், ஒரு கணம் தனது பாடலை நிறுத்திவிட்டு பின்னர் மீண்டும் பாட ஆரம்பித்தார். இந்த வீடியோவை அவரது ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘இசை நிகழ்ச்சியில் நிக் ஜோனாஸ் மீது அவரது ரசிகை ஒருவர் அவர் மீது பிராவை வீசினார். தயவு செய்து இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். மிகவும் வெட்கக்கேடான விஷயம். நிக் ஜோனாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் அவமரியாதை ஏற்படுத்தும். ஒரு ரசிகராக மட்டும் இருங்கள், கலைஞர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். அந்த ரசிகையை நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.