Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விபத்தில் சிக்கிய ராசி கன்னாவின் துணிச்சலுக்கு ரசிகர்கள் பாராட்டு

சென்னை: இந்தியில் உருவாகும் ‘பார்ஸி 2’ என்ற வெப்தொடரில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கும் ராசி கன்னா, ஒரு சண்டைக் காட்சியில் நடித்தார். அப்போது உயரமான மேடை ஒன்றில் இருந்து கீழே குதித்தபோது டைமிங் மிஸ்சாகி தரையில் விழுந்தார். இதில் அவரது முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த ஒரு டாக்டர், சில நாட்கள் கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் ராசி கன்னா இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இதுகுறித்து ராசி கன்னா கூறுகையில், ‘கேரக்டருக்கு தேவையான விஷயங்களை கண்டிப்பாக நாம் செய்தாக வேண்டும். அதனால் ஏற்படும் காயத்தை பொருட்படுத்தக் கூடாது. நாமே புயலாக மாறிய பிறகு இடி, மின்னல் நம்மை என்ன செய்யும்?’ என்றார். அவரது துணிச்சலை ரசிகர்களும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.