Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய தமன்னா

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் முறிவு ஏற்பட்ட பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தும் தமன்னா, இன்ஸ்டாகிராமில் சில போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு, சில தத்துவங்களை பதிவிட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது. அதில் அவர், ‘இது கண்டுபிடிக்கும் ஒரு கட்டம். நீங்கள் பாதி வடிவமைப்பாளராகவும், பாதி துப்பறியும் நபராகவும் இருக்கும் கட்டம். ஒவ்வொரு விவரமும் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது. யோசனைகள், ஒட்டும் காகிதங்களில் வாழ்கின்றன.

இது இன்னும் சரியாகவில்லை. ஆனால், அது அதன் வழியில் இருக்கிறது. நேர்மையாக சொன்னால், இதுதான் தாரக மந்திரம். ஒவ்வொரு பளபளப்பான பொருளுக்கு பின்னால், ஒரு பளபளப்பற்ற செயல்முறை இருக்கிறது. முடிவுகளும், சந்தேகங்களும் இதுதான். அந்த பகுதி அறிவார்ந்த குழப்பமான, உற்சாகமான ஒரு நடுப்பகுதி’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது மனதை பாதித்த சம்பவம் என்ன என்பது தெரியாமல், பெரும்பாலான ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.