Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த சாக்‌ஷி

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்து தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சில படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய வேடத்திலும் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். கடந்த ஜனவரி மாதம் தனது நீண்ட நாள் காதலர் நவ்னீத் என்பவரை இருவீட்டு பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்தார். சமீபத்தில் ரிலீசாகி சலசலப்பை ஏற்படுத்திய ‘ஃபயர்’ என்ற படத்தில், முக்கிய வேடத்தில் கிளாமராக நடித்திருந்தார். தற்போது ‘கெஸ்ட்’, ‘தி நைட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கும் சாக்‌ஷி அகர்வால், விதவிதமான உடையணிந்து கிளாமர் போட்டோஷூட் நடத்தி, அந்த போட்டோக்களையும் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ், நெட்டிசன்களை மட்டுமின்றி ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், கீர்த்தி பாண்டியன் ஆகிய நடிகைகள் திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோஷூட் நடத்துவதும், அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதும் வாடிக்கையாகி விட்டதால், தற்போது அவர்களது பாணியை சாக்‌ஷி அகர்வால் பின்பற்றுவது நெட்டிசன்களுக்கும், ரசிகர்களுக்கும் ‘ஷாக்’கான செய்தியாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் சாக்‌ஷி அகர்வாலை 21 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.