கோயில் திருவிழாவில் தொலைந்த தம்பியை தேடி இளம்பெண் பிதாலெஷ்மி அலைகிறார். மறுபுறம், கடத்தல் கும்பல் தொழிலதிபரை கடத்தி ரூ.25 கோடி பணம் கேட்கிறது. இரண்டு கதைக்கும் தொடர்பில்லை. ஆனால் பிதாலெஷ்மி, கடத்தல் கும்பலிடம் வந்து சிக்கும்போதுதான் கதை சூடு பிடிக்கிறது. பிதாலெஷ்மியின் உடல் அழகில் மயங்கும் கும்பலை சேர்ந்த சிலர் அவரை பலாத்காரம் செய்ய...
கோயில் திருவிழாவில் தொலைந்த தம்பியை தேடி இளம்பெண் பிதாலெஷ்மி அலைகிறார். மறுபுறம், கடத்தல் கும்பல் தொழிலதிபரை கடத்தி ரூ.25 கோடி பணம் கேட்கிறது. இரண்டு கதைக்கும் தொடர்பில்லை. ஆனால் பிதாலெஷ்மி, கடத்தல் கும்பலிடம் வந்து சிக்கும்போதுதான் கதை சூடு பிடிக்கிறது. பிதாலெஷ்மியின் உடல் அழகில் மயங்கும் கும்பலை சேர்ந்த சிலர் அவரை பலாத்காரம் செய்ய முயல்கிறது. பிதாலெஷ்மி மீண்டாரா, தம்பியை கண்டுபிடித்தாரா, கடத்தல் கும்பல் கதி என்ன என்பதையெல்லாம் திரில்லாக சொல்கிறது படம்.
வெறும் 23 மணி நேரத்தில் உருவான படம் இது. தமிழ் சினிமாவில் இது புதுமையான முயற்சி. பிதாலட்சுமியாக அனுகிருஷ்ணா, சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். தம்பியை தேடும்போது காட்டும் பதற்றம், கடத்தல் கும்பலின் காமப் பார்வையில் சிக்கும்போது காட்டும் தவிப்பு என அனுகிருஷ்ணா ஸ்கோர் செய்கிறார். வில்லனாக ஆதேஷ்பாலா. பணத்தாசை பிடித்த கடத்தல்காரராக கச்சிதம் காட்டுகிறார். சாம்ஸுக்கு மெல்லிய வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதில் தனது வழக்கமான நகைச்சுவையை கலந்து ஓரளவு கலகலப்பூட்டியிருக்கிறார்.
பிதாலட்சுமியின் தம்பியாக தர்ஷித். இயல்பான தோற்றத்திலேயே, பரிதாபங்களை அள்ளிச் செல்கிறார். தொழிலதிபரின் மனைவியாக வருகிற ரெஹானா இளம் ரசிகர்களை கிக் ஏற்றுகிறார். 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படம் திருவிழா காட்சிகள், கடத்தல் சம்பவங்கள் என பல இடங்களில் ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு வேலை கொடுத்திருக்கும் என்பதை உணர முடிகிறது. ஒன்லைனாக கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனாலும் புதிய முயற்சிக்காக பாராட்டலாம்.