Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெண் தயாரிப்பாளர் தவறாக நடந்து கொண்டார்: சைப் அலிகான் பகீர் புகார்

மும்பை: பெண் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சைப் அலிகான் பகீர் புகார் கூறியுள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சைப் அலி கான். இவர் நடிப்பில் கடைசியாக தேவரா என்ற பான் இந்தியா திரைப்படம் வெளியானது. ஆரம்பகாலத்தில் ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அவரது வாழ்க்கையில் நடந்த விசித்திரமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். தற்போது அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ‘‘என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் எனக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஒரு பெண் தயாரிப்பாளர் செலவுக்கு பணம் கொடுப்பார். ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார். நான் அவரது கன்னங்களில் முத்தமிட்டால் மட்டுமே பணம் தருவதாக கூறினார். நான் அவருக்கு 10 முத்தங்கள் கொடுத்து வாரத்திற்கு ரூ.1,000 பெறுவேன். சில நேரம் என்னிடம் அத்துமீறி நடந்து கொள்வார். பணத்துக்காக அனைத்தையும் சகித்துக்கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் சோஷியல் மீடியாவில் இது பற்றி விவாதித்து வருகிறார்கள். சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை, நடிகைகளுக்கு மட்டுமில்லை. நடிகர்களுக்கும் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.