Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தயாரித்த படம் தோல்வி எதிரொலி: மும்பை வீட்டை ரூ.8 கோடிக்கு விற்ற சோனு சூட்

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சோனு சூட். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த் நடித்த ‘கள்ளழகர்’ படத்தில் அறிமுகமான சோனு சூட் தொடர்ந்து ‘நெஞ்சினிலே’, ‘ராஜா’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அதன்பிறகு இந்தியில் பிஸியான சோனு சூட், சமீபத்தில் ‘ஃபதேஹ்’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

இந்நிலையில் மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் தனது வீட்டை ரூ.8.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டை கடந்த 2012ம் ஆண்டு ரூ.5.16 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் சோனு சூட். இதன்மூலம் அவருக்கு ரூ.2.94 கோடி லாபம் கிடைத்துள்ளது.

1247 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டில் 2 கார் பார்க்கிங் உள்ளது. இதற்கு விற்பனை வாரியாக ரூ.46.60 லட்சம் மற்றும் பதிவு தொகையாக 30,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ‘ஃபதேஹ்’ படத்தை சோனு சூட் தயாரித்தும் இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கடன்களை திருப்பி செலுத்தவே அவர் வீட்டை விற்று இருப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.