Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கொங்கு மண்ணில் படமான ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

சென்னை: திருமலை புரொடக்‌ஷன் சார்பில் கே.கருப்புசாமி, அமராவதி இணைந்து தயாரித்த படம், ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’. சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும், அதன் மக்களையும் பற்றி கலப்படம் இல்லாமல் சொல்லும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி, டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டனர். நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் நடித்துள்ளார். மற்றும் கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா, தமிழினியன் விகடன் நடித்திருக்கின்றனர். விமல் ஒளிப்பதிவு செய்ய, ‘மூடர்கூடம்’ நடராஜன் சங்க ரன் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து சுகவனம் கூறுகையில், ‘நிலத்தில் நன்கு உழைக்கும் பாட்டாளியை

நல்லபாடன் என்றழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இங்கு நிலங்களற்று உழைக் கும் மனிதர்களின் கதை இது. ஒண்டிமுனி என்ற சிறுதெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் கொண்ட நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை, நல்லபாடனின் போராட்டத்தை பற்றி படம் பேசுகிறது’ என்றார்.