Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி மோகன்: திரையுலகினர் திரண்டு வாழ்த்து

சென்னை: புதிதாக படத் தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ரவி மோகன் தொடங்கியுள்ளார். திருப்பதிக்கு நேற்றுமுன்தினம் சென்று தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு முன்னதாக ஆசி பெற்று வந்தார் ரவி மோகன். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ரவி மோகன் ஸ்டூடியோஸ் அறிமுக விழாவை அவர் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடத்தினார். இந்த விழாவில் ரவி மோகனின் அம்மா வரலட்சுமி, அவரது அண்ணன் ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.

நடிகர்கள் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், ரிதேஷ் தேஷ்முக், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, நடிகை ஜெனிலியா உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரவி மோகன், ‘‘முதல் முறையாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 2 படங்களை தயாரிக்கிறேன். இதில் ஒரு படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடிக்கிறார். அந்த படத்தை நான் இயக்குகிறேன். படத்தின் தலைப்பு அன் ஆர்டினரி மேன்.

மற்றொரு படத்தை கார்த்திக் யோகி இயக்க நானும் எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ் நடிக்கிறோம். கெனிஷா என் வாழ்க்கையில் வந்தது வரம். அவர் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு. இந்த விழாவுக்கு வந்து என்னை வாழ்த்திய திரையுலக நண்பர்களுக்கு நன்றி. இது எனது வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாள்’’ என்றார். இரு படங்களின் பூஜையும் தொடர்ந்து நடைபெற்றது.