இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்கள் பெரும்பாலும் இந்தி, கன்னடம், தமிழ் திரையுலகில் இருந்து வந்தவைதான். இதை தவிர்த்து வெறும் 50 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவான குஜராத்தி படம் ஒன்று, ரூ.100 கோடி வசூலித்து சாதனை படத்துள்ளது. அங்கித் சாகியா இயக்கத்தில் கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான படம், ‘லாலு கிருஷ்ண சதா சஹாயதே’. இது ஒரு ஆன்மிக படம்.
இதன் தயாரிப்பாளருக்கு 200 மடங்கு லாபத்தை குவித்துள்ளது. குஜராத்தி மொழியில் வெளியான படங்களில் மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.95.5 கோடி வசூலும், வெளிநாடுகளில் ரூ.5.5 கோடி வசூலும் பெற்றுள்ளது.
