Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விசித்திரமான கதையில் நடித்ததை மறக்க முடியாது: சொல்கிறார் சுனைனா

சென்னை: யெல்லோ பியர் புரொடக்‌ஷன் சார்பில் சதீஷ் நாயர் தயாரித்துள்ள படம், ‘ரெஜினா’. முதன்மை வேடத்தில் சுனைனா நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தை டொமின் டி‘சில்வா இயக்கியுள்ளார். இவர், மலையாளத்தில் வெளியான ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய வர். ‘ரெஜினா’ படத்தில் நடித்திருப்பது குறித்து சுனைனா கூறியதாவது: என் சிறுவயதில் இருந்து நிறைய மேடை நாடகங்களில் நடித்துள்ளேன். எனவே, வித்தியாசமான கேரக்டர் களில் நடிக்க அதிக முக்கியத்துவம் தருகிறேன். சீனு ராம சாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’, பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’, ஹலிதா ஷமீம் இயக்கியிருந்த ‘சில்லுக்கருப்பட்டி’ மற்றும் வெப்தொடர்கள் என்று, எதை தேர்வு செய்தாலும் கதையும், என் கேரக்டரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் தேர்வு செய்யும் படங்களும், கேரக்டர்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.

சாதாரண பெண் எப்படி அசாதாரண பெண்ணாக மாறுகிறாள், கடினமான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பது ‘ரெஜினா’ கதை. இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனரிடம் பேசியபோது, இதுபோல் நிஜவாழ்க்கையில் நடக்குமா என்று கேட்டேன். மனிதர்களின் வாழ்க்கையில் காமெடி, சென்டி மெண்ட் என்று கலந்து இருந்தாலும், அதையும் தாண்டி சிலர் விசித்திர மாக நடந்துகொள்வார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது கடினமான சம்பவங்கள் நடந்திருந்தால், அந்த அடிப்படையில் அப்படி நடந்துகொள்வார்கள். அப்படிப்பட்டசிலரை மையப்படுத்தி இந்த ‘ரெஜினா’ படம் உருவாகியுள்ளது.