Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏழை சிறுவர்களுக்காக இலவச டான்ஸ் பயிற்சி: ஷெரிப் மாஸ்டர் ஏற்பாடு

சென்னை: நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’ஐ அறிமுகப்படுத்தினார். தமிழ் திரைப்படத் துறையிலும், பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியும் பெயர் பெற்றவர் ஷெரிப் மாஸ்டர். அவர் கூறுகையில், ‘‘பொருளாதார காரணங்களால் பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட நடனக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம், குழந்தைகளுக்கு வருடந்தோறும் இலவச நடனப் பயிற்சி வழங்கப்படும். எதிர்கால நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் திறமைகளை உருவாக்கும் நோக்கத்துடன், தொழில்முறை வழிகாட்டல் துறையைச் சார்ந்த அனுபவங்களை வழங்குவது இந்த தளத்தின் குறிக்கோள்’’ என்றார். இத்தளத்தை அகரம் ஜெயஸ்ரீ அறிமுகப்படுத்தினார். நடிகர் ரவி மோகன், பாடகி கினீஷா, இயக்குனர்கள் பொன்ராம், கார்த்திக் யோகி, நடிகர் கருணாகரன் பங்கேற்றனர்.