Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நண்பர்களின் காதலுக்கு கவிதையால் உதவிய பாடலாசிரியர்

சென்னை: சமீபத்தில் வெளியான ‘இந்திரா’ திரைப்படத்தில் வசந்த் ரவி மற்றும் மெஹ்ரீன் பிர்சதா இணைந்து நடித்தனர். இப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேவ் சூர்யா. அவர் கூறியது: 2018ஆம் ஆண்டு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தேன். எனினும், அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில், நான் சினிமாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தது அந்தப் படத்தில் தான் என்றாலும், நான் அங்கம் வகித்து வெளியான முதல் திரைப்படம் ‘இந்திரா’.

எனக்கு தமிழ் மொழி மீது இருந்த விருப்பம் தான் பாடலாசிரியர் ஆகியிருக்கிறேன். என் பாட்டி தமிழ் ஆசிரியை. அதனால் எனக்கு தமிழில் தெரியாத சந்தேகங்களை அவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. என் பாட்டி மூலம் தான் தமிழ் மொழி மீது எனக்கு விருப்பம் வந்தது. இதனால் தான் எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வமும் வந்தது. நான் என் அம்மா, நண்பர்கள் மற்றும் என்னை சுற்றி இருந்தவர்களுக்காக கவிதை எழுத துவங்கினேன். என் நண்பர்களின் காதலுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு காதல் கவிதைகள் எழுதி கொடுத்திருக்கிறேன்.