Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நாளந்தா பல்கலை பின்னணியில் கேம் ஆஃப் சேஞ்ச்

சென்னை, ஜூலை 16: ‘கேம் ஆஃப் சேஞ்ச்’ என்பது 5ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை பரவி இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம். இந்த படம் இந்தியாவில் நடைபெற்ற பல உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாறு, மனித உணர்வுகள் மற்றும் தனிப்பட்ட மாற்றங்களை கையாளும் இந்த திரைப்படம், ஆழமான கதைகளின் தொகுப்பாக வெளிப்படுகிறது. சித்தார்த் ராஜ்சேகர் மற்றும் மீனா சாப்ரியா ஆகியோரது சித்தார்த் ராஜசேகர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புகழ்பெற்ற மலையாள இயக்குநர் சிதின் இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச நட்சத்திரங்களின் கலவையுடன், இப்படம் உலகளாவிய மனப்பான்மையோடு உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், சாதாரண வாழ்க்கை தருணங்களே எவ்வாறு வாழ்க்கையை மாற்றும் முக்கியமான திருப்புமுனைகளாக மாறுகிறது என்பதைக் காண்பிப்பதே. ஒவ்வொரு கதையும் உள்ளார்ந்த ஆற்றல், மாற்றம் மற்றும் மனித உற்சாகத்தை பிரதிபலிக்கிறது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியாக உள்ளது.