Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தானே விநாயகர் சிலை செய்து கொண்டாடிய பிரம்மானந்தம்

ஐதராபாத்: நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலை விற்பனையும் கடந்த சில நாட்களாகவே களைகட்டி வந்தது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் தன் கையில் விநாயகர் சிலையை வைத்தபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக இந்த விநாயகர் சிலையை தன் கையாலேயே உருவாக்கியுள்ளார் பிரம்மானந்தம்.

இதுகுறித்து பிரம்மானந்தம் கூறும்போது, “நான் இப்படி விநாயகர் சிலை செய்வதை எப்போது துவங்கினேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு இது ஞாபகத்தில் இருக்கும் வரை இந்த கலையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். என் சொந்த கரங்களால் உருவம் கொடுத்து விநாயகர் சிலையை உருவாக்குவது என்பது ரொம்பவே பெர்சனலாக உணர வைக்கிறது. அப்படி இந்த சிலை உருவான நாளிலிருந்து எங்கள் வீட்டில் பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட துவங்கி விடுகிறது” என்று கூறியுள்ளார்.