Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரேசர் இயக்குனரின் கேங்ஸ்டர் படம்

சென்னை: மோட்டார் பைக்குகளை வைத்து மிகவும் வித்தியாசமான ‘ரேசர்’ என்ற படத்தை இயக்கியிருந்த சதீஷ் என்கிற சாட்ஸ்ரெக்ஸ், அடுத்து என்கவுன்டர் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி நடக்கும் கேங்ஸ்டர் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஹாலிவுட் பாணியில் அதிரடி ஆக்‌ஷன் படமாக இது உருவாக்கப்படுகிறது. ‘ரேசர்’ படத்தை தயாரித்திருந்த ஹஸ்ட்லர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறார்.

இன்னும் பெயரிடவில்லை. விக்கி மேக் ஒளிப்பதிவு செய்ய, பரத் இசை அமைக்கிறார். அகில் சந்தோஷ், பர்வீன், அருள்தாஸ், ஜெயக்குமார், சில்மிஷம் சிவா, சிவம், அருண் உதயன், குட்டி கோபி, பூவையார் நடிக்கின்றனர். இப்படத்தின் தொடக்க விழா, புதுச்சேரியில் இருக்கும் அப்பா பைத்தியசாமி கோயிலுக்குள் நடந்தது. புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்று படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.