Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கங்குவா பட எடிட்டர் மர்மச்சாவு

திருவனந்தபுரம்: சூர்யா நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘கங்குவா’ படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மலையாள சினிமாவில் முன்னணி எடிட்டர்களில் ஒருவர் நிஷாத் யூசுப் (43). இவர் கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென வீட்டுக்குள் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து கொச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நல குறைவால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை. அவரது மர்ம சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.