Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித் சொன்ன தகவலால் வியப்படைந்த கவுதமி

சென்னை: ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்த கவுதமி, விஜய், அஜித்துடன் நடித்ததே கிடையாது. இந்நிலையில் கவுதமி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அஜித் குறித்து பேசிய நடிகை கவுதமி, ‘‘ஆரம்ப காலகட்டத்தில் என் வீட்டின் அருகில் தான் அஜித் வேலை பார்த்து கொண்டிருந்தாராம். இதை அவர்தான் என்னிடம் ஒருமுறை சொன்னார். அது எனக்கு வியப்பாக இருந்தது.

இன்று அஜித் சினிமாவிலும் விளையாட்டிலும் ஜெயித்ததை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் குடும்பம், சினிமா, விளையாட்டு என தனித்தனியாக பிரித்து எல்லாவற்றிலும் வெற்றி பெறுகிறார். உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்’’ என கூறியுள்ளார். நடிக்க வருவதற்கு முன் அஜித் பைக் மெக்கானிக் வேலை பார்த்து வந்திருக்கிறார் பிறகு பைக் விற்பனையாளராகவும் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.