Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழில் அறிமுகமாகும் ஜெர்மன் நடிகர் பிரசாத் லோகேஸ்வரன்

ஜெர்மனியில் குடியேறிய தமிழ் வம்சாவளியை சேர்ந்த பிரசாத் லோகேஸ்வரன், அங்கு நடிப்பு, சண்டை, டப்பிங் போன்ற துறைகளில் நன்கு பயிற்சி பெற்று, ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். விரைவில் அவர் தமிழ் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் தந்தை எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். தமிழ் திரையுலகில் சாதிக்க துடிக்கிறேன். நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். தற்போது ‘ரத்தமாரே’ என்ற படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகிறேன். படக்குழுவினரை ரஜினிகாந்த் ஆசிர்வதித்தார்.

அவரை சந்தித்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. படத்தின் தலைப்பை விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது பிராட் பிட்டின் நடிப்பு பயிற்சியாளரிடம் பயிற்சி பெறும் நான், ஜெர்மன் மொழி ஆசிரியராக பணியாற்றுகிறேன். விரைவில் இந்தியாவில் குடியேற விரும்புகிறேன்’ என்றார்.