Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

என்னை திருமணம் செய்துகொள்: மேடையில் காதலை தெரிவித்த இயக்குனர்

சென்னை: அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள `டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம், வரும் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அபிஷன் ஜீவிந்த், மேடையில் தனது தோழியிடம் காதலை தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், `இந்த நிகழ்ச்சி யில் முக்கியமான ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

அகிலா இளங்கோவன்... சொல்ல வேண்டும் என்பதை விட, அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். 6ம் வகுப்பில் இருந்து உன்னை எனக்கு தெரியும். 10ம் வகுப்பில் இருந்து நாம் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறோம். என்னை அக்டோபர் 31ம் தேதியன்று திருமணம் செய்துகொள்வாயா? ஐ லவ் யூ ஸோ மச். பலமுறை நான் பலவீனமாக இருக்கும்போது, அவர்தான் என்னுடன் இருந்தார். நான் இந்த நிலமைக்கு வருவதற்கு எனது அம்மா எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவரும் என்னுடன் இருந்திருக்கிறார்’ என்று பேசியுள்ளார்.