Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘பேயை நம்பினால் பணம் சம்பாதிக்கலாம்’; சுப்பிரமணியம் சிவா

சென்னை: மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி.லலிதா தயாரித்துள்ள படம், ‘தாரணி’. ஆனந்த் இயக்கத்தில் மாரி, அபர்ணா, விமலா, ஆனந்த், இலக்கியா, இம்ரான், சசி நடித்துள்ளனர். நவீன் சுந்தர் எடிட்டிங் செய்ய, காயத்ரி குருநாத் இசை அமைத்துள்ளார். வெங்கடேஷ் மாவேரிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனரும், நடிகருமான சுப்பிரமணியம் சிவா பேசுகையில், ‘இந்த படம் ஹாரர் பாணியில் உருவாகியுள்ளது.

பேய் கதை நம்மை எப்போதும் கைவிடாது. பேயை நம்பினால் சினிமாவில் சம்பாதிக்கலாம் என்று இயக்குனர் சுந்தர்.சி சொல்வார். ‘தாரணி’ படம் வெற்றிபெற வாழ்த்துகள்’ என்றார். இப்படத்தின் இயக்குனர் ஆனந்த் பேசும்போது, ‘திரைத்துறையில் ஒரு பெண் முன்னேற எப்படி போராடுகிறாள், இங்குள்ள சிலரால் அவள் எவ்வளவு பாதிக்கப்படுகிறாள் என்பதை மையப்படுத்தி படத்தை இயக்கியுள்ளேன்’ என்றார்.